லாட்டரி மார்ட்டினுக்கு தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.12.41 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூர்: கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 5 இடங்களிலும், கர்நாடகா, மேற்கு வங்காளம், பஞ்சாப், உத்தர பிரதேசம், மேகலாயா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் என மொத்தம் 22 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், இந்தச் சோதனை கடந்த நவம்பர் 16ஆம் தேதி இரவு வரை நீடித்தது. இதனிடையே, இந்தச் சோதனையில் மொத்தம் ரூ.12.41 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இது தொடர்பாக அமலாக்கத்துறை எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது, “மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனமான பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டலுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தர பிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 22 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. தாய், மகளை கடத்தி ரூ.1 கோடி கேட்டு பேரம்!
இந்தச் சோதனையில் வழக்கு தொடர்பான பல்வேறு குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவை சிக்கின. அது மட்டுமல்லாமல், கணக்கில் வராத ரூ.12 கோடியே 41 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், 6 கோடியே 42 லட்சம் ரூபாய் வங்கி பணம் முடக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.