நெல்லை ; தேவர்குளம் பகுதியில் சாதியை குறிவைத்து போலீசார் பொய் வழக்கு போடுவதற்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், வன்னிக்கோனேந்தல் பஞ்சாயத்தில் தேவர்குளம், வன்னிக்கோனேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்து தேவர்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. இந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறையினர் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது மட்டும் பல்வேறு வழக்குகளை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பதிவு செய்வதாகவும், கடை வியாபாரிகளையும், வாகனம் வைத்திருப்பவர்களையும் குறி வைத்து பொய் வழக்குப் பதிவு செய்து தொழில் செய்ய விடாமல் பிரச்சினை செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனை கண்டித்து தேவர்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தனர். இது குறித்து தகவலறிந்து ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களுடன் பேச்சுவார்தை நடத்தி கலைந்து போகக் கூறினர். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால், பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் இசக்கி ராஜா உள்ளிட்ட முக்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.
இத குறித்து தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் சங்கரன்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிக அளவில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சாதியை குறிவைத்து போலீசார் பொய் வழக்கு போடுவதற்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ‘இந்தாங்க ஆதார்… பான் கார்டு’… ரெய்டு நடத்திய போலீசாருக்கு ஷாக் ; சட்டவிரோதமாக ஊடூருவிய வங்கதேச இளைஞர்கள் கைது…!!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்தில் மக்களை சமுதாய ரீதியாக குறிவைத்து பொய் வழக்கு பதியப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒன்பது கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன.
விடியா திமுக ஆட்சியில் காவல்துறை பாரபட்சமாக செயல்பட்டு வருவதும், சமுதாய ரீதியாக மக்களை அணுகி பொய் வழக்குகள் பதிவதும் கடும் கண்டனத்திற்குரியது. “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கோட்பாட்டை சட்டத்தை நிலைநிறுத்தும் பொறுப்பில் உள்ள காவல்துறையினர் உணரவேண்டும்.
தேவர்குளம் பகுதியில் பதிந்துள்ள வழக்குகளின் தன்மையை ஆராய்ந்து, பொய் வழக்குகளை வாபஸ் பெற்று, இனி தமிழ்நாட்டில் எங்கும் சாதிய கண்ணோட்டத்துடன் பொய் வழக்குகள் பதியாவண்ணம் உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு விடியா அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/sureshkalipandi/status/1788547091004051635
இதனிடையே, தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் எஸ்ஐ பவுல்ராஜ் அப்பகுதி பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவதாக புகார் எழுந்து வரும் நிலையில், அவர் இதற்கு முன் பணியாற்றிய போலீஸ்நிலையத்தில் குற்றவாளியை முன்ஜாமீன் எடுக்க சொல்லி பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
This website uses cookies.