தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல.. தந்திர மாடல் ஆட்சி.. மக்களை ஏமாற்றும் ஆட்சி : இபிஎஸ் சாடல்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2023, 4:21 pm

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல.. தந்திர மாடல் ஆட்சி.. மக்களை ஏமாற்றும் ஆட்சி : இபிஎஸ் சாடல்!!

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல, தந்திர மாடல் ஆட்சி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திமுக அமைச்சரவையில் இருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் ஒரு விண்ணப்பத்தை கொடுத்து பல்வேறு தகவல்களை நகர பேருந்தில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் விளக்கம் கேட்பது கண்டிக்கத்தக்கது. இதில் குறிப்பாக கட்டணமில்லா பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் உள்ளிட்ட விவரங்களை கேட்பது கடும் கண்டனத்துக்குரியது.

உலகில் எங்கேயும் பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் எவரிடமும் எந்த அரசும் இதுபோன்ற கேள்விகளை கேட்டதில்லை. இதனை திமுக அரசு செய்கிறது என குற்றச்சாட்டை முன்வைத்தார். தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதும் நகர பேருந்தில் மகளிர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என் அறிவித்தார்கள். ஆனால், அறிவிப்பின்படி தற்போது நடக்கவில்லை.

முன் பக்கம், பின் பக்கம் பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்த நகர பேருந்தில் பெண்கள் ஏறினால் தான் கட்டணமில்லாமல் செல்ல முடியும். மற்ற நகர பேருந்துகளில் ஏறினால் கட்டணம் செலுத்த வேண்டும். ஆகவே, தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல, தந்திர மாடல் ஆட்சி, மக்களை ஏமாற்றும் திமுக ஆட்சி. இந்த சுழலை கட்டணமில்லா பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் சாதி குறிப்பிட்டு கேட்பது, தொலைபேசி எண்ணை கேட்பது கண்டிக்கத்தக்கது.

இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அதையெல்லாம் இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, இனியாவது எதிர்க்கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொண்டு தீர்வு காணவேண்டும் என தெரிவித்தார். மேலும் கூறுகையில், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. அதிகளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும். இதுபோன்று, முறையான பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும்.

டெல்டா விவசாயிகளுக்கு உரிய முறையில் தண்ணீர் வழங்க வேண்டும். டெல்டா விவசாயிகளுக்கு உரிய முறையில் தண்ணீர் வழங்க வேண்டும். கடன் வாங்கி தான் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். டெல்டா விவசாயிகளுக்கு உரிய முறையில் தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றியுள்ளது. திமுக ஆட்சியில் ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 249

    0

    0