தே.ஜ கூட்டணிக்கு வாங்க… முக்கிய கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!
Author: Udayachandran RadhaKrishnan12 April 2025, 11:41 am
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்கு, வெற்றி வியூகம் குறித்து திட்டமிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்க: செல்வப்பெருந்தகை மீது வழக்குப்பதிவு.. கொந்தளித்த நிர்வாகிகள் : என்ன நடந்தது?
கடந்த 2021ல் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. பின்னர் அந்த கூட்டணியை முறித்துக் கொண்டது. 2024ல் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக தனியாக கூட்டணி போட்டு தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் மீண்டும் பாஜக உடன் கூட்டணியை நேற்று அமித்ஷா அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக வெற்றி பெற அடுத்தடுத்து வியூகங்களை அமைத்து வருகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணியை பலம் வாய்ந்த கூட்டணியாக தமிழகத்தில் மாற்ற, மற்ற கட்சிகளிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி, அதிமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருந்த தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்த இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்திக்க அதிமுக தரப்பு பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இரட்டை இலக்கத்தில் தெகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக கேட்டதாகவும், ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் தேமுதிக இதற்கு பதில் கூறாத நிலையில், பாமகவிடமும் பேச்சுவார்த்தை நடத்த இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும், அக்கட்சயின் தந்தை மகன் இடையே சமரசம் ஏற்பட்ட பின் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
