கம கம கறி விருந்து.. ஓபிஎஸ்-சின் சொந்த ஊரில் பிரமாண்டம்… ஸ்கெட்ச் போட்டு அசத்திய இபிஎஸ் தரப்பினர்..!!

Author: Babu Lakshmanan
15 August 2023, 6:18 pm

போடிநாயக்கனூரில் ஓபிஎஸ் அலுவலகம் அருகாமையில் எடப்பாடி அணியினர் நடத்திய கறி விருந்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஓ பன்னீர்செல்வம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தின் அருகாமையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எடப்பாடி அணியினர் சார்பாக வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக கட்சி மாநாட்டிற்காக ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது.

இந்த ஒருங்கிணைப்பு விழாவில் போடி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் உள்ள ஓ பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினர் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் ஒருங்கிணைப்பு விழாவில் இணைந்தனர். அனைவருக்கும் போடிநாயக்கனூர் அதிமுக நகர பொறுப்பாளர் சேதுராமன் சால்வை மற்றும் கட்சி துண்டுகள் அணிவித்து அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியில் இணைத்துக் கொண்டனர்.

அனைவருக்கும் திருமண மண்டபத்தில் பிரியாணி உடன் அசைவ விருந்து உபசரிப்பு நடத்தி வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்தனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் நிதி முன்னாள் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வத்தினுடைய சொந்த தொகுதியான போடிநாயக்கனூரில் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் அருகாமையிலேயே உள்ள தனியார் மண்டபத்தில் எடப்பாடி அணியின் நடத்திய கறி விருந்து உடன் கூடிய இந்த ஒருங்கிணைப்பு விழாவில் ஓபிஎஸ் அணியிலிருந்து தொண்டர்கள் விலகி வந்து இணைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…