வேறு வழியில்லாமல் அரிட்டாபட்டி விவசாயிகளின் அறவழிப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், அரிட்டாபட்டி விவசாயிகள், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், அங்கு வந்த விவசாயிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது, “டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பாக, முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதையடுத்து, மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் ‘நாங்கள் (மத்திய அரசு)டெண்டர் அறிவித்ததில் இருந்து இறுதி செய்யும் வரை மாநில அரசிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. அதனால் இறுதி செய்கிறோம்’ என வெளிப்படுத்திவிட்டது.
எனவே, இந்த அரசு உண்மையிலேயே மக்கள் பாதிக்கப்படக்கூடிய திட்டம் எனக் கருதி இருந்தால், டெண்டர் விட்ட உடனே 9 மாத காலத்தில் உங்கள் உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. அதேநேரம், இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
யாருக்கோ உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் 9 மாத காலத்தை தாழ்த்தியுள்ளனர். ஆனால், நீங்கள் போராட்டத்தில் குதித்த காரணத்தினால், வேறு வழியில்லாமல் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். டங்ஸ்டன் ருரங்க ஏலத்திற்கான டெண்டர் விட்டது 2023, பிப்ரவரி.
அப்போதே தனித் தீர்மானம் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், இப்போதுதான் கொண்டு வந்தார்கள். 2023ஆம் ஆண்டு 6வது மாதம் சட்டமன்றம் கூடியது. பட்ஜெட் கூட்டம், மானியக் கோரிக்கை எல்லாம் நடைபெற்றது. அப்போது ஏன் கொண்டு வரவில்லை?
உண்மையிலேயே விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற திட்டம் என எண்ணியிருந்தால், 2023 ஆறாவது மாதம் சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கொண்டு வரவில்லை. இதையெல்லாம் விவசாயிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: வலதுசாரி அரசியல் நாடகம்.. சீமான் பாஜகவின் கொ.ப.செ? – திருமாவளவன் கேள்வி!
வேறு வழியில்லாமல் உங்களுடைய அறவழிப் போராட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது. அதன் வாயிலாகத்தான் மாநில, மத்திய அரசு இந்தச் சுரங்க ஏலத்தை ரத்து செய்திருக்கிறது. நானும் உங்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் கடுமையாகப் பேசினேன்.
என்னுடைய கேள்விக்கும் முறையான பதில் முதலமைச்சரிடம் இருந்து வராததால் நான் ஒரு வாக்கியத்தைச் சேர்த்தேன். அது, ‘என் உயிரைக் கொடுத்தாவது விவசாயிகளைக் காப்பாற்றுவேன்’ என்று நான் சொன்னேன். இதற்குப் பிறகுதான் முதல்வர், என் பதவியே போனாலும் பரவாயில்லை, நான் விடமாட்டேன் எனச் சொன்னார்” என்று பேசினார்.
ரசிகர்களுக்கான அஜித் படம் கடந்த 10 ஆம் தேதி அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளிவந்த நிலையில் அஜித்…
தென் கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஏழு மலையலை கடந்து சென்று சாமி தரிசனம்…
மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகியது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி எம்பியாக உள்ள…
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
This website uses cookies.