’நான் என் கடமையைத் தான் செய்றேன்’.. ஆனால், திமுக அரசு.. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

Author: Hariharasudhan
2 December 2024, 3:10 pm

எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டும் பிரச்னைகளுக்கு ஆளும் முதல்வர் பதில் அளிப்பதில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

விழுப்புரம்: மயிலம் மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இதனையடுத்து, திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழக முதல்வரிடம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என முதல்வர் கூறுகிறார்.

ஒரு பிரதான எதிர்கட்சித் தலைவராக மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை உரிய நேரத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம். நான் என் கடமையைத் தான் செய்கிறேன். ஆனால், ஆளுங்கட்சியின் முதல்வர் அதற்கு உரிய பதில்களை அளிப்பதில்லை. இன்றைக்கு இருக்கக்கூடிய முதல்வர், நாங்கள் கூறும் பிரச்னையைத் தீர்க்க முடியாத ஒரு முதல்வர்.

Thindivanam Rain

எதிர்க்கட்சி சுட்டிக்காட்டும் குற்றச்சாட்டுகளை சரியான முறையில் புரிந்து கொண்டு, அதற்கு தகுந்தார்போல் நடவடிக்கை எடுத்து, மக்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான் ஒரு நல்ல அரசு. ஆனால், அதை இந்த அரசு அதனைச் செய்வதில்லை. இந்த ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாண்டு காலமாக ஆமை வேகத்தில் அந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: எச்.ராஜா சிறை தண்டனை நிறுத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆனால், அதிமுக ஆட்சியில் ஒரு ஆண்டில் இரண்டு முறை மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டது” என்றார். முன்னதாக, மழை வெள்ளம் தொடர்பாக இபிஎஸ் கண்டனம் குறித்த கேள்விக்கு, ‘நாங்கள் எதிர்கட்சித் தலைவரின் கருத்துக்கு மதிப்பளிப்பதில்லை’ என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Atlee and assistant directors relationship அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!
  • Views: - 107

    0

    0