திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுகவினர் ஆஜராகினர்.
2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தலைவர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர்.
வைகோ மற்றும் சீமானை வரவேற்பதற்காக இரு கட்சியினரும் அங்கு திரண்டிருந்தனர்.
வைகோ மற்றும் சீமான் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்று சென்ற பின்னர் திடீரென
கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக திருச்சி விமான நிலைய காவல்துறையினர் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் , இருவரும் ஒருவருக்கு ஒருவர் கொடி கம்புகளால் தாக்கி கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் என் 2ல் ஆஜரானார். இதே வழக்கில் மதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மற்றும் நிர்வாகிகள் ராஜமாணிக்கம் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கு தொடர்பாக மதிமுகவிற்கும் எங்களுக்கும் எந்த பகையும் இல்லை – அண்ணன் வைகோவிற்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.
ராஜிவ் காந்தி குறித்து கருத்து கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சீமானை எதிர்த்து திருச்சியில் நடந்த போராட்டம் குறித்த கேள்விக்கு ? அப்படியாவது காங்கிரஸ் வெளியே வந்து போராட்டம் நடத்துகிறது என்பதில் மகிழ்ச்சி.
கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக கூறும் நீங்கள் உங்கள் தொலைக்காட்சியில் அரைமணி நேரம் என்னை பேச விடுங்கள். சென்னையில் 20 நாளில் 18 கொலைகள் நடந்துள்ளது – இதற்கு எல்லாம் குண்டாஸ் இல்லையா ? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதை நாம் எப்படி ஏற்பது.
வாதம் பிரதி வாதம் செய்து தான் எதையும் உருவாக்க முடியும், யூடியூபர்கள் மாரிதாஸ்,சங்கர் என பலர்கள் கருத்துக் கூறினால் எதிர் கருத்து தான் கூறவேண்டும் தூக்கி உள்ளே வைக்க கூடாது.
பேரறிவாளன் விடுதலை நாங்கள் எந்த வகையில் கொண்டாடவில்லை, கொண்டாட வேண்டுமென்றால் என் தம்பி விடுதலைக்கு நான் தான் முக்கியமாக கொண்டாட வேண்டும்.
பேரறிவாளன் நிரபராதி இல்லை என்று கூறும் அண்ணாமலை மோடி மற்றும் அமித்ஷா குஜராத்தில் நடைபெற்ற கலவரம் என்னவென்றே தெரியாமல் போனதா ? என்பதை கூற வேண்டும்.
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமை உருவாக்கியவர் கருணாநிதி. இதனை மூட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
Q Branch என்கிற சித்திரவதை சிறையை உடனடியாக மூடுங்கள் – இலங்கை தமிழகர்களில். அம்மாவை தனியாக, அப்பாவை தனியாக குழந்தையை தனியாக முகாம்களில் அடைக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு அதைச் செய்கிறோம் இதை செய்கிறோம் என்று கூறுவது உங்களுக்கு நாடகமாக இல்லையா என கூறினார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.