Homework காட்டச் சென்ற 3-ம் வகுப்பு மாணவி.. அடுத்த நொடியில் நடந்த துயரம்!

Author: Hariharasudhan
7 January 2025, 3:57 pm

கர்நாடகாவில் பள்ளி வகுப்பறையில் இருந்த 8 வயது சிறுமி திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு: கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 8 வயது மாணவி தேஜஸ்வினி, சாம்ராஜ்நகரில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அம்மாணவி நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். அங்கு இரண்டு வகுப்புகள் முடிந்த நிலையில், வீட்டுப்பாட நோட்டைக் காண்பிக்க வந்துள்ளார்.

Third std student died due to Cardiac arrest in Karnataka

இவ்வாறு ஆசிரியரைச் சந்திக்க நடந்து சென்று உள்ளார். அப்போது, திடீரென மாணவி மயக்கம் போட்டு கீழே விழுந்து உள்ளார். இதனால் சக மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பின்னர், உடனடியாக ஆசிரியர்கள், மாணவி தேஜஸ்வினியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: பிரபல பாலிவுட் நடிகரிடம் இருந்து அழைப்பு…சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்…!

அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், மாணவி தேஜஸ்வினி ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். பின்னர், இது குறித்து தகவல் கிடைத்த அவரது பெற்றோர், தங்கள் மகள் மாரடைப்பால் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததை நினைத்து, சாம்ராஜ்நகர் மருத்துவமனையில் கதறி அழுதக் காட்சி, அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது. சமீப காலமாக மாரடைப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • Honey Rose Complaint Chemmanur Owner Bobby Arrest பிரபல நடிகையிடம் பாலியல் அத்துமீறல்… பதுங்கிய பிரபல தொழிலதிபர் கைது!
  • Views: - 76

    0

    0

    Leave a Reply