சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய 63 வயது முதியவர்: போக்சோவில் கைது செய்த போலீசார்..!!

Author: Rajesh
20 April 2022, 8:15 pm

திருவள்ளூர்: 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி உல்லாசமாக இருந்து 8 மாத கர்ப்பிணியாக்கிய 63 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், செஞ்சி கிராமம், மேலாண்டை தெருவை சேர்ந்தவர் விவசாயி பரசுராமன் (63).

இவருக்கு சொந்தமாக நிலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி வயல் வேலைக்கு வந்து வயலில் பூ பறிக்கவும், கொய்யாக்காய் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அச்சிறுமி பரசுராமன் வயலில் கொய்யாக்காய் பறிக்க வந்த போது பரசுராமன் ஆசை வார்த்தை கூறி அங்கிருந்த கொய்யாத்தோப்புக்குள் அழைத்துச் சென்று அவரை வற்புறுத்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது

இதை யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டி பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயிடம் கூறியதை அடுத்து திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் உத்தரவின்பரில் காவல்துறை ஆய்வாளர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து பரசுராமனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர் மேலும் வேறு யாராவது சிறுமியுடன் தொடர்பில் இருந்தார்களா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu