வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறிய வளர்ப்பு மகள்: தந்தை வெட்டிப் படுகொலை…மதுரையில் அதிர்ச்சி!!
Author: Rajesh9 May 2022, 7:16 pm
மதுரை: வீட்டில் இருந்த முதியவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை தல்லாகுளம் கமலா 2வது தெரு பகுதியை சேர்ந்த கிருஷ்ணாராம்- பங்கஜவள்ளி தனது வளர்ப்பு மகளான நிவேதா என்பவருடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில்,சில தினங்களுக்கு முன் வளர்ப்பு தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சண்டை ஏற்பட்டது. இதனால் நிவேதா தனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் இன்று வீட்டில் இருந்த முதியவர் கிருஷ்ணாராம் மர்ம நபர்களால் இன்று காலை படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை நடந்த வீட்டிற்கு தல்லாகுளம் சரக உதவி ஆணையர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வளர்ப்பு மகளே இவரை கொலை செய்துள்ளாரா அல்லது வேறு யாரேனும் நபர்கள் கொலை செய்துள்ளனரா என காவல்துறை விசாரணையினர் மேற்கொண்டு வருகின்றனர்.