அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்தல் புறக்கணிப்பு : பேனர் வைத்து எதிர்ப்பை பதிவு செய்த பொது மக்கள்…!

Author: kavin kumar
9 February 2022, 6:11 pm

திருப்பூர் : நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி தாராபுரத்தில் மீண்டும் பொதுமக்கள் பேனர் வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள ஜின்னா மைதானம் ஆறாவது வார்டு முஹம்மதியா நகர் மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், அப்பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கடந்த 12 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகள்,

நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்துள்ளதாகவும், ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டியுள்ளனர். மேலும் அடிப்படை வசதிகள் செய்து தாரத நகராட்சி நிர்வாத்தை கண்டித்து வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி