‘எந்த வசதியும் செய்து கொடுக்கல’… தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சாலை மறியல்… இரவில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
19 April 2024, 10:00 pm

பல்லடத்தில் தேர்தல் பணிக்கு வந்த அரசு ஊழியர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கவில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பல்லடம் மங்கலம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 417 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க: வாக்காளர்கள் விடுபட்டதற்கு அரசின் தோல்வி பயம்… நீலகிரி பா.ஜ.க, வேட்பாளர் L.முருகன் குற்றச்சாட்டு!!

இந்நிலையில், தேர்தல் பணிக்காக நேற்று இரவு வரவழைக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு முறையாக உணவு ஏற்பாடு செய்து தரவில்லை எனவும், வாக்குப்பதிவு முடிந்த பிறகும் கூலித்தொகையை தரவில்லை எனக்கூறி பல்லடம் மங்கலம் சாலையில் அரசு கலைக் கல்லூரி முன்பு திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பல்லடம் மங்கலம் சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களிடம் காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 209

    0

    0