#LoksabhaElection.. தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல்.. கோவையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2024, 8:21 pm

#LoksabhaElection.. தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல்.. கோவையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்..!!!

சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சூலூர் சட்டப்பேரவை தொகுதி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தேவையான மருந்து மருத்துவ பொருட்களை தயார் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 332 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது இந்த வாதசாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்களை தயார் செய்யும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மும்முரமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.

வாக்குச்சாவடி மையங்களில் வேட்பாளர்களின் பெயர் தாங்கிய மற்றும் அவர்களது சின்னங்கள் தாங்கிய பட்டியல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர், எழுத பொருள் மற்றும் உபகரணங்கள் ஒரு பையில் வைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பணிகளில் வட்டாட்சியர் உதவி வட்டாட்சியர் மற்றும் , வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் உள்ளடங்கிய 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

வியாழக்கிழமை காலை வாக்கு சாவடிகளுக்கு பாக்கு பெட்டி உள்ளிட்ட பொருள்களை கொண்டும் செல்ல பணி துவங்கப்படும் என சூலூர் வருவாய் வட்டாட்சியர் தனசேகர் தெரிவித்தார்.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 277

    0

    0