கோவை: வெள்ளலூர் தலைவர் துணைத்தலைவர் பதிவியில் அதிமுக வெற்றி பெற்றாலும் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்று கூறி அதிமுக எம்.எல்.ஏ தாமோதரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் நேற்று தலைவர் மற்றும் துணை தலைவருகான மறைமுக தேர்தல், நடைபெற்றது. இந்த மறைமுக தேர்தலின்போது திமுக அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் மதியம் நடைபெற்ற மதிமுக தேர்தலின்போதும் திமுகவினர் மறைமுக தேர்தல் நடக்க கொடுக்கப்பட்ட வாக்கு சீட்டினை கிழித்து எறிந்தனர் இதனையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அதிமுகவை சேர்ந்த மருதாசலம் தலைவராகவும் கணேஷ் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் வன்முறைக்கு காரணமானவர்கள் எனக்கு ஒரு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மருதாசலத்தின் மகன் உட்பட 9 பேரை போத்தனூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனை கண்டித்து தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் பிரிவினர் எம்.எல்.ஏ தாமோதரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை, வெள்ளலூர் நடைபெற்ற பேரூராட்சி மறைமுகத் தலைவர் தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வில்லை. திமுகவினர் வேண்டுமென்றே அராஜகத்தில் ஈடுபட்டு கொலைவெறி ஆயுதங்களுடன் காவல்துறையை தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் அதிமுகவை சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று இரண்டு பெண்களை காவல் துறையினர் விடுவித்துள்ளனர் இது ஜனநாயகத்திற்கு புறம்பாக உள்ளது, தமிழக முதல்வர் கோவை மாவட்டத்தை வெறுப்பு கண்ணோட்டத்தில் வைத்துள்ளார் எனவும் தெரிவித்தார். வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வன்முறை சம்பவத்தை மறைக்கும் நோக்கில் அறப்போர் இயக்கத்தை கொண்டு வேண்டுமென்றே எஸ் பி வேலுமணி மீது ஊழல் புகார் உள்ளதாக செய்தியாளர் சந்திப்பை வைத்து இதனை திசைதிருப்பி உள்ளனர்.
அரப்போர் இயக்கம் முடிந்தால் பொங்கல் பரிசு தொகுப்பில் நடைபெற்ற ஊழலை வெளிக்கொண்டுவர ஆய்வுகளை நடத்தட்டும், என தெரிவித்தார். மேலும் திமுக சேனாதிபதி அங்கு ஆயுதங்களுடன் இருந்தார் என்றும் அந்த வீடியோ ஆதாரமும் தங்களிடம் உள்ளது எனக் கூறிய அவர் அவரை தேர்தல் பார்வையாளர்களாக யாரேனும் நியமித்தார்களா? என கேள்வி எழுப்பினார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.