வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் கல்லூரியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Author: kavin kumar
8 February 2022, 7:48 pm

கோவை: அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர காவல்துறை ஆணையாளர் பிரதீப்குமார் , மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்படும். இதனையொட்டி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பாதுகாப்பு அறைகளை தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா மாவட்ட ஆட்சியர் சமீரன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் காவல்துறை ஆணையாளர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

மேலும் பாதுகாப்பு அறைகளில் அமைக்கப்பட்டு உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வற்றையும் ஆய்வு செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி கோவை மாநகராட்சி பகுதிகளில் 1290 வாக்குச்சாவடிகளும் நகராட்சி பகுதி 390 வாக்குச் சாவடிகளும் பேரூராட்சி பகுதியில் 632 வாக்குச் சாவடிகளும் மொத்தம் 2312 வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…