திமுக அரசுக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர்கள்… BJP ஏபி முருகானந்தம் திடீர் சந்தேகம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2024, 5:45 pm

திமுக அரசுக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர்கள்… BJP ஏபி முருகானந்தம் திடீர் சந்தேகம்!

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் இன்று திருப்பூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் பேராதரவு அளித்ததாகவும் , அதன் முதல் வெற்றியாக குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பது பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.

இதேபோல் இந்தியா முழுவதும் பாஜகவிற்கு ஆதரவு பெருகி வருவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக வெளியீட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் மிகவும் ரசிகரிக்கப்பட்டதாகவும் அனைவரிடமும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி என்ற பிரதமரின் திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்ற நிலையில் பாஜகவிற்கான ஆதரவு மனநிலை அதிகரித்து இருக்கிறது. தமிழக முழுவதும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் தமிழகத்தில் ஆளும் மாநில அரசுக்கு சாதகமான செயல்பட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

கடந்த முறை வாக்களித்து வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தவர்களுக்கு கூட இந்த முறை வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் புகார் தெரிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டும் கூட எந்த ஒரு அணுகுமுறையும் இல்லை.

வாக்கு சதவீதத்தை கூட முறையாக தெரிவிக்க இயலாமல் தேர்தல் ஆணையம் குழப்பியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாக்காளர் சீட்டினை வீடுகளுக்கு வழங்க வேண்டிய அரசு அலுவலர்கள் குறிப்பிட்டு சின்னம் குறித்த வாக்காளர் சீட்டினை விநியோகித்துள்ளனர்.

மேலும் படிக்க: தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 6 மாத குழந்தை கடத்தல்.. SKETCH போட்ட டிப் டாப் லேடீஸ் : 24 மணி நேரத்தில் TWIST!

கடைசி இரண்டு நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை சரியான முறையில் செய்திருப்பதாகவும் இதனைத் தேர்தல் ஆணையம் பறக்கும் படை உள்ளிட்டோர் கண்டும் காணாமல் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகவும் மெத்தனமாக செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 239

    0

    0