தலைநகரில் சிக்கிய ஹவாலா பணம்… தேர்தல் விதி அமலான முதல் நாளே சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2024, 12:55 pm

தலைநகரில் சிக்கிய ஹவாலா பணம்… தேர்தல் விதி அமலான முதல் நாளே சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது!!

சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரிய அளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடைப்பெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து, நேற்று இரவு பூக்கடை உதவி ஆணையர் தலைமையில் அமைக்கட்பட்ட தனிப்படை போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது, ஆவணங்கள் இன்றி ரூ.1.42 கோடி பணத்தை வைத்திருந்த யாசர் அராபத், அதனை வாங்க வந்த குணா ஜெயின், மற்றொரு நபரையும் மடக்கி பிடித்தனர். இப்பொழுது, இந்த மோசடியில் ஈடுபட்ட 3 பேரை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் யானை கவுனி போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வாகனங்களில் போலீசார் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை யானைக்கவுனி பகுதியில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைபோல், ஈரோடு மாவட்டம் குமலன்குட்டையில் பறக்கும்படை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 202

    0

    0