நெருங்கும் தேர்தல்… இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான் : டிசம்பர் மாதத்தில் களம்.. அதிரடியில் இறங்கும் அதிமுக!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2023, 9:56 pm

நெருங்கும் தேர்தல்… இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான் : டிசம்பர் மாதத்தில் களம்.. அதிரடியில் இறங்கும் அதிமுக!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி குறித்து முடிவெடுத்தல், பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்தும், கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்டங்களில் கட்சி பொறுப்புகளில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு கட்சி சார்பில் குரல் கொடுக்க வேண்டும், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் சுணக்கம் இருக்கக் கூடாது. இதை சரியாக செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வரும் டிசம்பர் 3ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், டிசம்பர் மாதத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 281

    0

    0