உயர்மின் கோபுரத்தில் பணி செய்த போது எதிர்பாரா விபத்து : உடல் கருகி பலியான ஷாக் காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2024, 4:28 pm
திருச்சி கே.கே.நகர் அருகே ஓலையூர் ரிங் ரோடு பகுதியில் இன்று காலை மின் வாரிய ஒப்பந்த ஊழியர் மருங்காபுரியை சேர்ந்த உறவினர்களான கலாமணி (42) மற்றும் மாணிக்கம் (37) ஆகியோர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கலைமாமணி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் உயிரிழந்தார்.
இந்த சமயத்தில் கீழிருந்து மேல் ஏறிக் கொண்டிருந்த மாணிக்கம் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மாணிக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கேகே நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பத்தில் உயிரிழந்து தொங்கிய நிலையில் இருந்த கலைமாமணியை மீட்டனர்.
மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் பலி…#Trending | #Trichy | #Transformer | #ElecticityBoard | #Death | #ViralVideos | #UpdateNews360 pic.twitter.com/OMBkjVJqdG
— UpdateNews360Tamil (@updatenewstamil) December 18, 2024
இச்சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான இரண்டு பேரில் உடலை திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு வந்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அடுத்த காட்சி கண்களில் கண்ணீரை வரவழைத்தது.