ஐஸ்கிரீம் வண்டியால் பறிபோன உயிர்.. மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து உயிரிழந்த பெண்!
Author: Udayachandran RadhaKrishnan28 September 2024, 7:56 pm
ஐஸ்கிரீம் வண்டியால் பெண்ணுக்கு மின்சாரம் பாய்ந்து துடித்துடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்த வடிவேல் மனைவி சத்யா(வயது 24).
சத்யாவின் குடும்பத்தினர் மூன்று மினி வேன்களில் கொண்டு சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர்.
மேலும் படிக்க: திமுகவிடம் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்போம் : திருமா பாணியில் காங்., எம்பி போட்ட குண்டு!
இந்த நிலையில் சத்யா இன்று ஒரு வேனின் ஐஸ்க்ரீம் பிரீசர் பெட்டிக்கு மின் இணைப்பு கொடுக்க சுவிட்ச் போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக சத்யாவின் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சத்யாவை அவரது குடும்பத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.