மின்சார ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்: நாளை முதல் 100% ரயில்கள் இயங்கும்..தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

Author: Rajesh
13 February 2022, 6:11 pm

சென்னை: நாளை முதல் மின்சார ரயில்கள் 100 சதவீதம் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை 100 சதவீதம் இயங்க வில்லை. அதேபோல் ரயிலில் பயணிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே விதித்து இருந்தது. கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் மீண்டும் இறங்கு முகம் கண்டு வருகிறது.

இதையடுத்து, தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், ரயிலில் பயணிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அண்மையில் தெற்கு ரயில்வே தளர்த்தியது.

இந்நிலையில், நாளை முதல் மின்சார ரயில்கள் 100 சதவீதம் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு இயக்கப்பட்ட அட்டவணையின் படி 100 சதவீதம் ரெயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு ரயில் பயணிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ