போர்மேன் பேச்சை நம்பி பணி செய்த ஊழியர்: தூக்கி அடித்த மின்சாரம்: அலறித் துடித்த உறவினர்கள்….!!

Author: Sudha
18 August 2024, 12:54 pm

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலை  துணை மின் நிலையத்தில், பராமரிப்பு பணி நடந்து வந்தது.  இதில் புதிய மின்மாற்றி பொருத்தும் பணியில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர் செந்தில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் இருந்த  போர்மேன் சுப்பிரமணியன் என்பவர் மின்சாரம் நிறுத்தப்பட்டதாக கூறி செந்திலை பணி செய்ய வைத்ததாகவும், இதன் காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், உயிரிழந்த செந்தில் குடும்பத்தார்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும், உரிய நிவாரண நிதி வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கும் அரசு வேலை வழங்க பரிந்துரை செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர். 

மேலும், போர்மேன் சுப்பிரமணியன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…