‘ரூ.5 ஆயிரம் கொடுங்க உடனே வேலை முடிஞ்சுறும்’…மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி: பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்..!!

Author: Rajesh
13 April 2022, 5:57 pm

மதுரை: மேலூர் அருகே மின் இணைப்பு வழங்க விசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பண்டங்குடியில் உபமின் நிலையம் உள்ளது. இங்கு உதவி செயற் பொறியாளராக தங்க முனியாண்டி என்பவர் பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் கொட்டாம்பட்டியை சேர்ந்த விவசாயி கோபால கிருஷ்ணன் தனது மனைவி பெயரில் விவசாயத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக பண்டங்குடி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்ப மனு அளித்து உள்ளார். அதன்படி அவருக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக உதவி செயற்பொறியாளர் முனியாண்டி விவசாயி கோபால கிருஷ்ணனிடம் ரூ. 5,500 லட்சம் கேட்டுள்ளார்.


இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனை படி உதவி செயற் பொறியாளர் தங்க முனியாண்டியிடம் இன்று காலை அவர் பணத்தை கொடுத்து உள்ளார்.  அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி செயற் பொறியாளர் முனியாண்டியை கையும், களவுமாக கைது செய்தனர்.


பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து  தங்க முனியாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1403

    0

    0