உயர்த்தப்பட்ட மின் கட்டணம்.. – யூனிட் வாரியாக முழு விவரம்…!

Author: Vignesh
28 August 2024, 2:47 pm

புதுச்சேரியில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அமுலுக்கு வந்துள்ளது. 100 யூனிட்டுக்கு ரூ.2.25 என இருந்த கட்டணம் இரண்டு ரூபாய் 70 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. மின் துறையின் வரவு செலவு கணக்குகளை கணக்கிட்டு, இணை ஒழுங்கு மின்சார ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும். ஆணையம் மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்த பின்பு கட்டண உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட பின்பு ஜூன் 16ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தது.

இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரானது நடைபெற்று வந்த நிலையில், மின் கட்டண உயர்வானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி புதுச்சேரி மாநிலத்தில், வீடுகளுக்கு முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.25 என இருந்த கட்டணம் 2.70 ஆகவும், 101முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 ஆக இருந்தது. 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 ஆக இருந்தது. 6 ரூபாயாக உயர்வு 300 யூனிட்டுக்கு மேல் மின்சார குழு பயன்படுத்தும் வீடுகளுக்கு கட்டணம் ரூ.6.80ல் இருந்து 7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு குறைந்தபட்சம் 65 பைசா முதல் 85 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜூன் 16 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென்று புதுச்சேரி அரசு வைத்த கோரிக்கையை இணை ஒழுங்குமுறை ஆணையம் ஏற்க மறுத்ததால் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 16ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு மின் கட்டணமானது வசூலிக்கப்படும் என மின்துறை அறிவித்துள்ளது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 878

    0

    0