மின்வேலியை வெச்சா பயந்துடுவோமா? தோட்டத்தில் புகுந்து மரவள்ளி, தென்னை மரங்களை சூறையாடிய யானைகள்!!

Author: Sudha
9 August 2024, 11:21 am

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், மருதமலை, பேரூர் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது.

இதனால் ஏற்படும் மனித – விலங்கு மோதலில் உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.யானைகள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை, ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் பகுதியில் 7 யானைகள் கொண்ட யானை கூட்டம் ராஜப்பன், வெங்கடாசலம் மற்றும் கருப்புசாமி ஆகியோர் விவசாய தோட்டத்திற்கு புகுந்து அங்கு 1 1/2 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த மரவள்ளி மற்றும் தென்னை மரங்களை சூறையாடி சென்று உள்ளது. இது குறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

தொடர்ந்து யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் இந்த விஷயத்தில் அரசு மற்றும் வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்பதை அனைத்து விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் வலியுறுத்தி வருகின்றனர் .

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…