நள்ளிரவில் விடாமல் குறைத்த நாய்கள்.. இரவோடு இரவாக தனியாளாக வந்த அந்த உருவம்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2024, 4:19 pm

நள்ளிரவில் விடாமல் குறைத்த நாய்கள்.. இரவோடு இரவாக தனியாளாக வந்த அந்த உருவம்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

கோவை துடியலூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் நேற்று இரவு வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குணசேகரன் என்பவரது தோட்டத்தில் புகுந்து அவரது வீட்டை சுற்றிச் சுற்றி உணவு தேடியது.

மேலும் அங்கு நிறுத்து இருந்த டிராக்டரிலும் உணவு தேடிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாக ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

இவைகள் அவ்வப் போது உணவு தேடி மலை அடிவாரப் பகுதிகளாக மாங்கரை, வீரபாண்டி, தடாகம், பாப்பநாயக்கன் பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருவது தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் துடியலூர் அருகே உள்ள பாப்பநாயக்கன் பாளையம் பகுதில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை உணவு தேடி அங்கு இருந்த குணசேகரன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது.

காட்டு யானையை பார்த்ததும் அங்கு இருந்த நாய்கள் குரைக்கத் தொடங்கின. இருந்த போது அந்த யானை வீட்டைச் சுற்றி சுற்றி உணவு தேடியது. அப்போது அங்கு இருந்த அரிசி மூட்டையை தூக்கி வீசி அதைத் தின்று சேதப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: அப்போ பெரியார்.. இப்போ மோடி : BIO PICல் அதிரடி காட்ட வரும் சத்யராஜ்.!!

மேலும் அங்கு நிறுத்து இயிருந்த டிராக்டரிலும் ஏதாவது உணவு இருக்குமா என தேடியது. கிடைக்காததால் அங்கு இருந்து சென்று விட்டது.

சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது காட்டு யானை இருப்பதை கண்டு வீட்டினுள்ளேயே இருந்துவிட்டனர்.

இது அங்கு பொருத்தி இருந்த சி.சி.டி.வி யில் பதிவாகி இருந்தது அது தற்போது வெளியாகி உள்ளது. உயிர்சேதம் ஏற்படும் முன் காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!