‘போற போக்குல ஒரு குத்து விட்ட காட்டு யானை’ : நடுரோட்டில் ஜீப்பை விட்டு இறங்கி ஓடி உயிரை காப்பாற்றிக் கொண்ட ஓட்டுநர்!!

Author: Babu Lakshmanan
2 January 2023, 6:20 pm

கூடலூர் நகரப் பகுதியில் சாலையில் சென்ற காட்டு யானை எதிரே வந்த கோழிகளை ஏற்றி வந்த ஜீப்பை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமீப காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று அதிகாலை கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் திடீரென காட்டு யானை ஒய்யரமாக நடந்து வந்தது.

பிரதான சாலையில் யானை உலா வந்தது. கோழிகளை ஏற்றி வந்த ஜீப்பைநடுரோட்டில் நிறுத்திய வாகன ஓட்டி யானையைக் கண்டதும் அலறி அடித்து வாகனத்தை அங்கேய விட்டு ஓடினார். வாகனத்தில் அமர்ந்திருந்தவர்களும் ஓட்டம் பிடித்தனர்.

வாகனம் முன்பு வந்த யானை துதிக்கையால் வாகனத்தை முட்டி தள்ளி சென்றது இந்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

https://vimeo.com/785646237
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!