தோட்டத்தில் புகுந்து தென்னை மரத்தை வேரோடு சாய்த்து குருத்தை ருசி பார்த்த யானை : ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2023, 4:11 pm

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை ஒட்டி உள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரப் பகுதியில் உள்ளது.

இப்பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைக் கூட்டங்கள் தென்னை மரங்களை சாய்த்து குருத்துகள் மட்டும் சாப்பிட்டு செல்வது வழக்கமாக உள்ளது.

இதையடுத்து ஆழியார் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை தென்னை மரத்தை சாய்க்க முயற்சிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனியார் தோட்டத்து உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒற்றைக் காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!