மின் வேலியில் சிக்கி யானை பரிதாப பலி : கோவையில் அடுத்தடுத்து நிகழும் சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2022, 1:52 pm

கோவை : துடியலூர் அடுத்த வரப்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் வாழை மரங்களை பயிரிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் 3 காட்டு யானைகள் வாழைத் தோட்டத்தில் புகுந்து குழை தள்ளிய வாழை மரங்களை தின்றுள்ளது. அதில் ஒரு ஆண் யானை தோட்டத்தில் போடப்பட்டுள்ள மின் கம்பியை துதிக்கையில் பிடித்தவாறு மேட்டில் ஏற முயன்றுள்ளது.இதில் மின்சாரம் தாக்கி அந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர். தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மின்சாரம் தாக்கி இறந்த இந்த ஆண் சுமார் 12 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்னர்.

கடந்த 4 நாட்கள் முன்பு பெரியதடாகம் பகுதியில் ஒரு பெண் யானை நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனலிக்காமல் இறந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ