மருதமலை கோயிலில் முகாமிட்ட யானைகள்.. பயத்தில் உறைந்த பக்தர்கள்..!

Author: Vignesh
27 July 2024, 10:26 am

கோவை: மருதமலையில் மூன்று மணி நேரம் முகாமிட்ட காட்டு யானை: பக்தர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதி – வனப் பகுதிக்கு தீவிர முயற்சிக்குப் பிறகு விரட்டிய வனத்துறையினர்.

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ளது. முருகனின் ஏழாவது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படும் புகழ்பெற்ற திருக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மருதமலை கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பாதை மற்றும் வாகனங்கள் செல்லும் சாலையிலும் செல்ல முடியாமலும் ஒற்றை யானை மற்றும் கூட்டமாகவும் யானைகள் முகாமிடுவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், இன்று பிற்பகலில் படிக்கட்டு பாதையில் முகாமிட்ட ஒற்றைக் காட்டு யானை 3 மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே நின்று இருந்தது. இதனால், வாகனங்களில் செல்லும் பக்தர்களும், படிக்கட்டு பாதையில் செல்லும் பக்தர்களும் கீழே இருந்து மேலே செல்ல முடியாமலும், சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் பக்தர்களும் செல்ல முடியா படி சுமார் 3 மணி நேரம் அவதி அடைந்தனர்.

இது குறித்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்தது வனத் துறையினர் நீண்ட முயற்சிக்குப் பின்பு வனப் பகுதிக்குள் யானை விரட்டினர். பின்னர் நிம்மதி பெருமூச்சுடன் வீடு திரும்பினர் பக்தர்கள்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!