இது எங்க ஏரியா.. நாங்க எதுக்கு போகணும்? வனத்துறை விரட்டியும் முரண்டு பிடித்த யானைகள் : வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2024, 11:15 am

கோவை மேற்கு தொடர்ச்சி மலையைப் பகுதிகளில் அமைந்து உள்ளது மருதமலை சுப்பிரமணி சாமி கோவில். முருகனின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.

இங்கு வாகனங்கள் செல்லும் சாலை மற்றும் படிக்கட்டுகளில் நடந்து செல்லும் பாதை என இரண்டு பாதைகள் உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி ஒற்றை யானை மற்றும் யானைக் கூட்டங்கள் சாலையைக் கடந்து வனப் பகுதிகளுக்கு சென்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தனது குட்டிகளை பாதுகாப்புடன் வனப்பகுதியில் அழைத்துச் சென்றது.

மேலும் படிக்கட்டு பாதையில் ஒற்றைக் காட்டு யானை பல மணி நேரம் நின்றதால் நடந்து சென்ற பக்தர்கள் திரும்பி வீட்டுக்கு செல்ல கால தாமதம் ஏற்பட்டது. இதனால் மருதமலைக்கு செல்ல ஆறு மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதி கிடையாது என்றும் வனத் துறையினர் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தடை செய்து உள்ளனர். இந்நிலையில் இன்று மூன்று காட்டு யானைகள் வாகனங்கள் செல்லும் சாலையில் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தது.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பொழுது யானைகள் வனப் பகுதிக்குள் செல்லாமல் நீண்ட நேரம் நின்றால் அவர்கள் பட்டாசுகளை பயன்படுத்தி விரட்ட முயன்றனர். அந்த செல்போன் காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

மேலும் வருகிற 28 ஆம் தேதி முதல் 30 – ம் தேதி வரை ஆடி கிருத்திகை நடைபெற உள்ளதால் பொதுமக்களின் உயிருக்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் யானைகளை கண்காணித்து வனப் பகுதிக்குள் விரட்ட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 176

    0

    0