ஜெயிக்கப்போவது நீயா..? நானா..? வனப்பகுதியில் சண்டை போடும் காட்டு யானைகள்.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
23 May 2023, 9:39 am

கோவை ; வால்பாறை அருகே வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சண்டை போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை கேரளா வனப்பகுதியில் அதிரப்பள்ளி வன பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக காணப்படும்.

வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள், காட்டெருமை போன்ற வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்து அதிரப்பள்ளி பகுதிக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். வெற்றிலை பாறை என்ற பகுதியில் சாலையோரம் இரண்டு காட்டு யானைகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டு விளையாடியது. அதை சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!