ரயில் மோதி தொடரும் யானைகள் மரணம் : கோவை நவக்கரையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2022, 3:20 pm

கோவை : நவக்கரையில் ரயிலில் அடிபட்டு 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

கோவை மாவட்டம் தமிழ்நாடு-கேரள எல்லையான நவக்கரை பகுதியில் ரயில் பாதையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மங்களூர்-சென்னை விரைவு ரயில் சென்றது போது தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூன்று காட்டு யானைகள் உயிரிழந்தது.

யானைகள் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் தலைமையில் கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார், இளந்திரையன் ஆகியோர் தலைமையில் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் இன்ஜினில் தண்டவாளத்தில் பயணித்த படி வந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நவக்கரை பகுதியில் சிறிது நேரம் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அதனை தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள வாளையார் ரயில் நிலையத்திலும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் தொலைக்காட்சி மூலம் யானை வழிப்பாதை மற்றும் ரயில் பாதைகள் ரயில் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழக கேரள வனத்துறை அதிகாரிகள், மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1389

    0

    0