மலை மீது குடிகொண்ட யானைகள் : நீண்ட நாள் கழித்து வந்த யானைகளால் குடியிருப்பு வாசிகள் அச்சம்… வனத்துறைக்கு கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2022, 4:32 pm

கோவை : திருவள்ளுவர் நகரில் உள்ள மலையில் இரண்டு காட்டுயானைகள் நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இராண்டு காட்டு யானைகள் நடமாடி வருகிறது. மலையின் கீழ் பகுதியில் யானைகள் நடமாடி வருகிறது.

இதனால் யானை எப்பொழுது வேண்டுமானாலும் ஊருக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் யானையை ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று ஒற்றை யானை சுற்றி திரிந்த நிலையில் இன்று இரண்டு யானைகள் சுற்றி திரிவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Actress Sneha has a rare disease.. Prasanna praises her courage! நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!