கோடையை குளிர்விக்க ஷவர் பாத்…குதூகலமாக குளியல் போட்ட குட்டி யானைகள்: இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ..!!

Author: Rajesh
14 April 2022, 1:57 pm

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை வெப்பத்தை சமாளிக்க இரண்டு குட்டி யானைகள் ஷவரில் குளித்து மகிழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், “வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குட்டி யானைகளாகிய 8 வயது ரோகினி மற்றும் 6 வயது பிரகிருதி யானைகள் வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஷவர் பாத் செய்து மகிழ்கின்றன.

விலங்குகளின் வெப்பத்தைத் தணிக்க கோடைகால செறிவூட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக யானைகளுக்காக AAZP குழுவால் ஒரு மண் குளமும் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, சில மாவட்டங்களில் தற்போதே வெப்பநிலை 100 டிகிரியை தாண்டிவிட்டது.

இதனால் மனிதர்களைப் போலவே வன விலங்குகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. எனவே கோடை வெப்பத்தை சமாளிக்கவும், விலங்குகளை நீர்சத்து இழக்காமல் காப்பாற்றவும் வனத்துறை சார்பாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு பகுதியாக வண்டலூரில் உள்ள யானைகளுக்கு ஷவர் குளியல் வசதி செய்யப்பட்டுள்ள வீடியோவை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பெரும் வரவேற்பினை அளித்து, பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி