ELITE ஒயின் ஷாப் மூடல்.. இனி நாங்க நிம்மதியா இருப்போம் : இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள்.!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2024, 12:55 pm

வேலூர் மாநகருக்குட்பட்ட காகிதபட்டறை பகுதியில் மட்டும் சுமார் 7 டாஸ்மாக் கடைகள் உள்ளது.

இதில் எலைட் ஓயின் ஷாப் உட்பட 2 கடைகள் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகாமையில் உள்ளதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகல் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே அரசு பள்ளி மற்றும் கோவில்கள் உள்ளதால், இக்கடைகளை அகற்றக்கோரி காகிதபட்டறையை சேர்ந்த கோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக.. தேதியுடன் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இவ்வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், காகிதபட்டறை பகுதியில் உள்ள கடை எண் 11344 எலைட் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட நிலையில் இன்று எலைட் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் இனிப்பு வழக்கு கொண்டாடினர். மேலும் பொது மக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது கடை மூடப்பட்டதால் நிம்மதியான சூழல் உருவாகியுள்ளதாக கூறினர்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 700

    0

    0