புரோட்டா ரூபத்தில் வந்த எமன்.. கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம் : கோவையில் நடந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 December 2023, 12:38 pm

புரோட்டா ரூபத்தில் வந்த எமன்.. கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம் : கோவையில் நடந்த விபரீதம்!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன். இவர் கோவை மாவட்டம் சூலூரில் தங்கி அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

இதனிடையே நேற்று இரவு ஹேமச்சந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தனது அறைக்குச் சென்ற மாணவர் ஹேமச்சந்திரன் இன்று காலை அசைவின்றி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சூலூர் போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் நேற்று 13 வயது சிறுமி பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கையில் மாரடைப்பால் உயிரிழந்த சூழலில், கோவையில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு உறங்கிய கல்லூரி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 493

    0

    0