கதறும் கங்காரு பாய்ஸ்…வரலாற்று சாதனை படைத்த நிதிஷ் ரெட்டி…ஆனந்த கண்ணீரில் தந்தை..!

Author: Selvan
28 December 2024, 9:19 pm

மெல்போர்ன் டெஸ்டில் நிதிஷ் ரெட்டியின் மைல்கல்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை கொடுத்து தடுமாறி வந்த நிலையில் 8-வது விக்கெட்க்கு தமிழக வீரர் வாஷி மற்றும் இளம் வீரர் நிதிஷ் ரெட்டி பொறுமையாக விளையாடி அணியை மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீட்டனர்.

Nitish Reddy Pushpa celebration

அப்போது 50 ரன்களை கடந்த நிதிஷ் ரெட்டி புஷ்பா அல்லு அர்ஜுன் ஸ்டைலில் தன்னுடைய அரை சதத்தை கொண்டாடினார்.ஒரு கட்டத்தில் அவர் சதத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் போது வாஷி மற்றும் பும்ரா அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வந்தனர்.

நிதிஷ் 99 ரன்களில் எதிர்முனையில் இருக்க ஆட்டம் பரபரப்பானது,ரசிகர்கள் பலர் அவர் முதல் சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என பிரார்த்தனை பண்ணி வந்தனர்,நிதிஷின் அப்பா தன்னுடைய மகனின் முதல் சர்வதேச சதத்தை பார்க்க ரொம்ப ஆவலுடன் இருந்தார்,இந்த சூழலில் சிராஜ் சாமர்த்தியமாக ஆடி நிதிஷின் சதத்திற்கு உதவி செய்தார்.

இதையும் படியுங்க: FIRE ஆட்டம்…புஷ்பா ஸ்டைலில் மாஸ் காட்டிய நிதிஷ் ரெட்டி…திணறிய AUS பவுலர்கள்..!

இதன்மூலம் தன்னுடைய முதல் சதத்தை ருசித்த நிதிஷ் ரெட்டியை இந்திய வீரர்கள், ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்,அவருடைய தந்தை மைதானத்தில் மகனின் ஆட்டத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார்,அதன் பின்பு அவர் இந்த நாளுக்காக தான் எங்களுடைய குடும்பம் காத்துக்கொண்டிருந்தது,இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்கவே மாட்டோம் என கண்கலங்கி பேசினார்.நிதிஷ் ரெட்டி தன்னுடைய முதல் சதத்தை,என்னுடைய அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டிருந்தார்.

இவருடைய ஆட்டத்தை பலரும் பாராட்டி வந்த நிலையில்,ஆந்திர கிரிக்கெட் வாரியம் அவருக்கு 25 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.நிதிஷ் ரெட்டியின் ஆட்டத்தால் இந்த டெஸ்ட் மேட்ச்சில் உயிர் இருக்கிறது என்று இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 20

    0

    0

    Leave a Reply