ஆம்ஸ்டிராங் கொலை குற்றவாளி மீது என்கவுன்டர்… ரஜினிகாந்த் சொன்ன ஸ்மார்ட் பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2024, 11:35 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல தொழிலதிபர் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். திருமணம் நிகழ்வு முடிவடைந்ததையடுத்து விமானம் மூலம் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு ரஜினி பதில் அளித்தார். அம்பானி வீட்டு கடைசி திருமணம், கலந்து கொண்டது மகிழ்ச்சி. பெரிய அளவில் திருமணத்தை நடத்தியிருக்காங்க என தெரிவித்தார். இதனை தொடர்ந்து கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் வெளியாகியுள்ளது. தொடர்பான கேள்விக்கு இன்னும் படம் பார்க்கவில்லை. நாளை பார்க்க போகிறேன் என தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். என்கவுன்டர் மட்டுமே சட்டம் ஒழுங்கிற்கு தீர்வாகுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் நடிகர் ரஜினிகாந்த நோ கமெண்ட்ஸ் என பதிலளித்துவிட்டு சென்றார். அப்போது ரஜினி ரசிகர் ஒருவர் ஆம்பானி வீட்டில் நீங்கள் ஆடிய டான்ஸ் சூப்பாரக இருந்தது தலைவா என குரல் எழுப்பினார். அதற்கு நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!