மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு.. யாருக்கும் எந்த பாதிப்புமில்லை : அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2023, 9:46 pm

மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு.. யாருக்கும் எந்த பாதிப்புமில்லை : அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பரமசாத்து என்ற இடத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே சிறு தடுப்பணை அமைக்கும் பணியினை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் பொன்னை ஆற்றின் குறுக்கே சோளிங்கர் சித்தூர் சாலையில் அமைக்கபடும் புதிய மேம்பால கட்டுமான பணிகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இவருடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர் .

பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் காவிரி குண்டாறு இணைப்பு வேண்டும் என்பதற்காக மாயன் ஓடையில் மிகப்பெரிய தடுப்பணைகளில் இருந்து தண்ணீர் செல்ல இரண்டு கால்வாய்கள் வெட்டும் வேலைகள் நடந்துகொண்டுள்ளது.

அரசாங்க பணமில்லாமல் வெளியில் கடன் வாங்கி பணிகளை செய்கிறோம். கலைஞர் இருக்கும் போதே தடுப்பணைகள் கட்டினோம் புதுக்கோட்டை மாவட்டத்தை இணைக்கும் வகையில் இரண்டு கால்வாய்களை கட்டி வருகிறோம்.

மூன்றாவது கால்வாய் கட்ட டெண்டர் விடவுள்ளோம். அமலாக்கத்துறை மணல்குவாரிகளில் அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள் மணல்குவாரிகள் தொடர்ந்து செயல்படும் வேலை நடந்து வருகிறது.

புதிய மணல்குவாரிகளும் செயல்படும் பொன்னை மேம்பாலம் பணிகள் இன்னும் மூன்று மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் காட்பாடியில் புதிய மேம்பாலம் அமைக்கவும் டெண்டர் விடவுள்ளோம் என கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ