விஜய்க்கு ஆதரவாக பேசியதால் அமலாக்கத்துறை ரெய்டு.. இது என்னடா புது டுவிஸ்டா இருக்கே!
Author: Udayachandran RadhaKrishnan14 November 2024, 6:49 pm
நேற்று வரை சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த விஜய், தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார்.
சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி புதிய கட்சியை தொடங்கி மாநாட்டையும் வெற்றிக்கரமாக நடத்தியும் விட்டார்.
தவெகவுக்கு உதவிய அரசியல் பிரமுகர்?
மாநாட்டின் போது விஜய் பேசிய பேச்சுக்கள் தான் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை புலம்ப வைத்தது. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சுக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்த்தாலும், விசிகவின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆதரவாக பேசினார்.
மேலும் சினிமாவில் இருந்து வந்த உதயநிதிக்கு உடனே துணை முதலமைச்சர் பதவி என்ற பேச்சையும் முன் வைத்தார். இது திமுகவை கொந்தளிக்க வைத்தது.
மேலும் தவெக மாநாட்டுக்கு மார்டின் மற்றும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனா மறைமுக உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதுவும் திமுகவுக்கு குடைச்சலை கொடுத்தது.
திமுக வலையில் சிக்கிய விசிக
இதனால் திமுக அமைச்சர் மூலம் ஆதவ் அர்ஜூனாவின் வாயை அடைக்க திருமாவிடம் கூறப்பட்டது. ஆனால் அவரும் ஆதவுக்கு ஆதரவாக பேசினார்.
இதையும் படியுங்க: ஏராளம்…தாராளம் : திருப்பதி ஏழுமலையானுக்கு கோடிக் கோடியாக நன்கொடை வழங்கிய பக்தர்!
பின்னர் சுதாரித்துக் கொண்டு மாறி பேசினார். இருப்பினும் ஆதவ் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து திமுகவுக்கு அறவே விருப்பமில்லாமல் போக டெல்லியை நாடியது திமுக.
தற்போது பாஜக – திமுக இடையே சுமூகமான உறவு உள்ளதால் உதவி செய்ய டெல்லியும் சம்மதித்தது. அதன்படியே இன்று ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை நுழைந்தது. ஏற்கனவே மார்ட்டின் அமலாக்கத்துறை பிடியில் உள்ளதால், இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை கதவை தட்டி ரெய்டு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.