தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக இன்ஜினியர் R.சந்திரசேகர் 2வது முறையாக தேர்வு : குவியும் வாழ்த்து…!!

Author: Babu Lakshmanan
29 December 2023, 6:59 pm

தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக இன்ஜினியர் R.சந்திரசேகர் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் தலைவராக கடந்த இன்ஜினியர் R.சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டார். பொறுப்பை ஏற்றது முதலே பாராலிம்பிக் சங்கத்தில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு வந்தார்.

குறிப்பாக, கிராமப்புற மாற்றுத்திறனாளி இளைஞர்களை விளையாட்டு வீரர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார். அவரது செயல்பாடுகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், பாராட்டுகளும் குவிந்தன.

இந்த நிலையில், தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக இன்ஜினியர் R.சந்திரசேகர் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், மேற்பார்வையாளர்கள் ஜே.சந்திரசேகர், மகாதேவ், துணைவேந்தர் சுந்தர் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!