தங்கையை காதலித்ததால் ஆத்திரம்.. காதலனை அடித்தே கொன்ற கொடூர அண்ணன் : கோவையில் SHOCK!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2024, 8:49 am

தங்கையை காதலித்ததால் ஆத்திரம்.. காதலனை அடித்தே கொன்ற கொடூர அண்ணன் : கோவையில் SHOCK!

கோவை இருகூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (23). இவர், வெள்ளலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார்.

கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.இந்த விவகாரம் பெண்ணின் அண்ணன் சுருளி (எ) சுரேந்திரன் (28) என்பவருக்கு தெரியவந்தது.

இதனால் சுருளிக்கும், ஜெயச்சந்திரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 26 ம் தேதி சுருளி, ஜெயச்சந்திரன் வேலை பார்க்கும் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றார்.

பின்னர் அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி பைக்கில் ஏற்றி தடாகம் பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு சுருளியின் நண்பர்கள் அஜித், நவீன், கார்த்திக், குழந்தை ஆகியோர் இருந்தனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து ஜெயச்சந்திரனை சவுக்கு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

மேலும் படிக்க: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிய கார்கள் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!!

பின்னர் அவரை மிரட்டி விட்டு சென்றனர். இந்த தாக்குதலில் ஜெயச்சந்திரனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. வீட்டுக்கு சென்று அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயச்சந்திரன் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.பின்னர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சுருளி, அஜித், நவீன், கார்த்தி, குழந்தை ஆகிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Second Wife Mounika talk About Balu Mahendra அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!