பணி உத்தரவாதத்தை உறுதி செய்க… வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்க கோவை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கம் திட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan19 July 2023, 5:07 pm
கோவை மாநகராட்சியில் 12 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 4000 -க்கு மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் , ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியில் அமர்த்தவும், பணியில் தொடர வைப்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் வழங்கவில்லை.
மேலும் கலெக்டர் அலுவலகம் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்துள்ளனர்.
ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாகவும், ஊழியர்களுக்கு பாதகமாக உள்ள இந்த ஒப்பந்தத்தை அனைத்தும் கோவை மாநகர மாமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும் அல்லது ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தத்தில் இதை நிபந்தனயைக சேர்த்தி தான் இந்த பணிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது SIGMA INFRA என்ற கார்ப்ரேட் நிறுவனம் பணியாளர்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஒப்பந்தத்தில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 12 வருடமாக பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நீக்கிவிட்டு வடமாநில பணியாளர்களை கொண்டு இந்த பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஒப்பந்த பணியாளர்கள் சங்கங்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளன.
இது குறித்து அவர்கள் வைத்துள்ள கோரிக்கையின் முழு விபரம்
- ஒப்பந்த பணியாளர்களுக்கு வேலை உத்தரவாதம் வழங்க வேண்டும்
வேறு மாநில பணியாளர்களை பணி அமர்த்தி வேலை செய்ய கூடாது
என ஒப்பந்த விதியின் &ழ் கொண்டு வர வேண்டும். - ஒப்பந்த பணியாளர்களுக்கு வாரத்திற்கு ஏதேனும் ஒரு நாள்
ஊதுயத்துடன் கூடிய வரவிடுப்பு வழங்க உறுது செய்ய வேண்டும். - ஒப்பந்த பணியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள்
அறிவித்த குறைத்த பட்ச ஊதியம் ரூ. 721/- (Minimum Wages Act)வழங்க
உத்தரவிடவேண்டும். - அனைத்து ஒப்பந்த பணியாளர்களின் ESI & PF சரி பார்த்து கோவை
மாநகராட்சி கட்டியுள்ளதை உறுதி செய்ய வேண்டும். - ஒப்பந்த பணியாளர்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை Soap, Mask, gloves மற்றும் விபத்து ஏற்படாதவாறு மிளிரும் வண்ண சீருடை
ஓப்பந்ததார செலவிலேயே வழங்க வேண்டும். - ஒப்பந்த பணியாளர்கள் அந்த அந்த மண்டலத்தில் பணிபுரியம் ஒப்பந்த
பணியாளர்களை வேலைவிட்டு நிறுத்துவதற்காக பழி வாங்கும்
எண்ணத்தில் வேறு மண்டலத்திற்கு மாறுதல் செய்யக்கூடாது. முடியாத
பட்சத்தில் தேவை ஏற்பட்டால் 5km சுற்றளவுக்குள் இடமாறுதல்
செய்யலாம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த பங்கமும்
விளைவிக்க கூடாது என்று ஒப்பந்த விதிகளின் கீழ் உறுதியளிக்க
வேண்டும். - ஒப்பந்த பணியாளர்களை சட்ட விதிகளின் படி 8 மணிநேரம் வேலை
வழங்க வேண்டும். அதற்கு மேல் வேலை செய்யும் பட்சத்தில் அதற்கு
உண்டான ஊதியத்தை இரு மடங்காக வழங்க பட வேண்டும்.
அதோடு தற்போது 12 வருடமாக பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நீக்கிவிட்டு குறைந்த வடமாநில பணியாளர்களை கொண்டு இந்த பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஒப்பந்த பணியாளர்கள் சங்கங்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளன.
ஒப்பந்த பணியாளர்கள் கோவை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக சுமார் 12 ஆண்டுகள் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறன்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை ஒப்பந்த வீதியின் கீழ் கொண்டு வர உறுதியளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளனர்.
0
0