சாலை மார்க்கமாக தேனி சென்ற ஓபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பு : ஆண்டிப்பட்டியில் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2022, 7:11 pm

தேனி : டெல்லியில் இருந்து இன்று தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரிய குளத்திற்கு திரும்பிய ஓபிஎஸ்க்கு அதிமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஆனது கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தேர்ந்தெடுப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றி செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தநிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய ஒ.பன்னீர்செல்வம் செயற்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பன்னீர்செல்வம் மீது பாட்டில்கள் வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுகளை தொடர்ந்து டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் எம்பி இரவீந்திரநாத் குமார் டெல்லியில் இருந்து திரும்பியவர்கள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த பின் தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சூழ வருகை தந்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை முன்பு ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் தனது சொந்த ஊரான பெரிய குளத்திற்கு சென்றார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?