கனிமவளக் கொள்ளை குறித்து புகார் கூறியவர் லாரி ஏற்றிக் கொலை.. வழக்கை திசை மாற்றும் திமுக : இபிஎஸ் பரபர!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2025, 10:51 am

புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளை குறித்து புகார் தெரிவித்தத சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்னடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.ஜெபகர் அலி அவர்கள் , சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது

இதையும் படியுங்க: உசிலம்பட்டி அருகே அரங்கேறிய ‘அசுரன்’ சம்பவம்.. தீண்டாமை கொடுமையின் உச்சம்.. நடந்தது என்ன?

கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த விடியா அரசு.

கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும்.

EPS Demand to Take Action against Murder

கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • Nayanthara to walk out of Mookuthi Amman 2 மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து நயன்தாரா விலகல்? பதறிய குஷ்பு!