அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் தொடர் தோல்வி ஏற்பட்டு வருகிறது.
இதனையடுத்து கட்சியை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது உள்ள மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.
இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஒத்துக்கொள்ளவில்லை.
இதனையடுத்து தான் அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16.8.2024 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும்.
தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.