மக்களாட்சி வரவேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடியார் வர வேண்டும் : அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 9:14 pm

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக சென்னை சென்றிருந்த எதிர்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி இன்று கோவை திரும்பினார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அண்ணா சிலை சிக்னலில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து அதிமுக கோவை மாவட்ட தலைமை அலுவலகம் இதய தெய்வம் அம்மா மாளிகைக்கு நடந்து வந்த அவருக்கு தொண்டர்கள் பொன்னாடை அணிவித்தும், மலர் கொத்துகள் வழங்கியும் வரவேற்பளித்தனர்.

SP Velumani Admk EPS Edappadi Palanisamy Coimbatore Aiadmk

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி ஜெயலலிதாவின் ஆசியுடன் கழக பொதுசெயலாளராக பொது குழு உறுப்பினர்களால், மக்களால் எதிர்பார்த்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழக மக்களுக்கு எழுச்சி மட்டுமல்லாது அனைவரும் கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது என தெரிவித்தார்.

மீண்டும் அதிமுக வரவேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என தெரிவித்த அவர் அதற்கு ஒற்றை தலைமை வேண்டுமென அனைவரும் எதிர்பார்த்த நிகழ்வு நிகழ்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த ஒரு ஆண்டு காலமாக கோவையில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை எனவும் எடப்பாடியார் ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் இருந்த பொழுது கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மீண்டும் வரவேண்டும் என தெரிவித்தார்.

SP Velumani Admk EPS Edappadi Palanisamy Coimbatore Aiadmk

மக்களாட்சி வரவேண்டும் என்றால் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என அனைவரும் முடிவு செய்துள்ளார்கள் என தெரிவித்தார். தற்பொழுது அதிமுக தலைமை நிலைய செயலாளராக எனக்கு பதவி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

SP Velumani Admk EPS Edappadi Palanisamy Coimbatore Aiadmk

எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் எதிர்பார்த்த அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தவர் எடப்பாடியார் என்று கூறிய அவர் மீண்டும் அவர் முதலமைச்சராக வருவார் எனவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

SP Velumani Admk EPS Edappadi Palanisamy Coimbatore Aiadmk

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நாங்கள்(அதிமுக எம்.எல்.ஏ மற்றும் மூத்த நிர்வாகிகள்) அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என தெரிவித்தார். தலைமைக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்ந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேள்விக்கு பதில் அளித்த அவர் அதனை தலைமை கழகம் தான் முடிவு செய்யும் என பதில் அளித்தார்.

SP Velumani Admk EPS Edappadi Palanisamy Coimbatore Aiadmk

இதையடுத்து அவருக்கு தாமரை பூக்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 697

    0

    0