குஜராத் புறப்படும் இபிஎஸ், ஓபிஎஸ் : பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூற தனித்தனி விமானங்களில் செல்ல உள்ளதாக தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2022, 11:15 am

பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார்.

அவருக்கு வயது 100 ஆகும். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அகமதாபாத செல்ல உள்ளனர்.

இருவரும் வெவ்வேறு விமானங்களில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 394

    0

    0